சில வரிகளில் சில செய்திகள் (03.01.2019)

சில வரிகளில் சில செய்திகள் (03.01.2019)

*திருவாரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கியது. 

*மக்களவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை சபாநாயகர் சஸ்பென்ட் செய்ததை கண்டித்து இன்று மாநிலங்களவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

*1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் பதவி கொடுத்து அழகுப்பார்த்தது என்று பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.

* விவசாயிகளுக்கான கடன் உதவி ரத்து செய்யப்பட்டுவிடும் என்ற உண்மைக்கு மாறான தகவளைப்பரப்பி வருவதாக காங்கிரஸ் கட்சியின் மீது பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.

*தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைப்பெற்றது.

* மதுரை தோப்பூரில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ம் தேதி அடிக்கல் நாட்டுவார் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

*சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மார்பக புற்றுநோய் பரிசோதனை மையம் மாநில அமைச்சர்கள் விஜயபாஸ்கர், நிலோபர் கபில், ராஜலஷ்மி, வளர்மதி ஆகியோர் முன்னிலையில் துவங்கப்பட்டுள்ளது.

*ராமஜென்ம பூமி குறித்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

*ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது   டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று இந்தியா ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்துள்ளது.

*இந்திய அணியின்  புஜாரா 130 ரன்கள் எடுத்துள்ளார்.