சில வரிகளில் சில செய்திகள் (03.12.2018)

சில வரிகளில் சில செய்திகள் (03.12.2018)

* சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அரசியல் தலைவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

*காவிரி மேலாண்மை வாரிய கூட்டம் இன்று தில்லியில் நடைபெறுகிறது.

*நாகை மாவட்டத்தில் முகாம்களாக இயங்கி வரும் பள்ளிகளுக்கும், புயலால் சேதமடைந்து சீரமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

*காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் சரணனின் உடல் அவரது சொந்த ஊரான கரிசல்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

*வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு வடதமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

* சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசும், டீசல் லிட்டருக்கு 39 காசும் குறைந்துள்ளது.

* உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்று இந்தியாவிற்கும், பெல்ஜியத்திற்கும் நடைபெற்ற போட்டி டிராவில் முடிந்தது. நேற்று புவனேஸ்வரில் நடந்த போட்டியில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டன.

*பங்களாதேஷ் பொது தேர்தலில் முன்னாள் பிரதமர்  கலிதாஜியாவின் வேட்பு மனு நிராகரிக்கப்படுள்ளது. அவர், ஊழல் குற்றசாட்டுகளின் பேரில் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

*சபரிமலை விவகாரத்தால் கேரள சட்டபேரவை தொடர்ந்து நான்காவது நாளாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்களுக்கும், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கும் இடையே சட்டபேரவையில் கடும் வாக்கு வாதமும் அமளியும் நிலவி வருகிறது.

*இந்தியாவின் அதிவேக ரயிலான ரயில் 18 முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25ம் தேதி புது தில்லிக்கும் வாரனாசிக்கும் இடையே துவக்கி வைக்கப்படும். இந்த ரயில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செள்ளகூடியதாகும்.