சில வரிகளில் சில செய்திகள் (04.01.2019)

சில வரிகளில் சில செய்திகள் (04.01.2019)

*பிரதமர் நரேந்திர மோடி இன்று மணிப்பூரில் நான்கு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் "வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வித்திடும்." என்று கூறினார்.

*விவசாயிகளின் உர மானியத்தை நேரடியாக அவர்கள் வங்கி கணக்கில் செலுத்துவது குறித்து நிதி ஆயாக் ஆலோசித்து வருவதாக மத்திய் உர மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் இந்திரஜித் சிங் கூறியுள்ளார்.

*தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளின் உற்பத்தியை பெருக்குவதற்கு மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் கூறியுள்ளார்.

*பவானி சாகர் அணையிலிருந்து வரும் 7ம் தேதியிலிருந்து ஏப்ரல் 30ம் தேதி வரை தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

*தமிழகத்தில் ஓவ்வொரு மாவட்டத்திலும் கால்நடைகளுக்கு அவசர ஊர்தி இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மாநில கால்நடை பராமரிப்பு த்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.