சில வரிகளில் சில செய்திகள் (04.12.2018)

சில வரிகளில் சில செய்திகள் (04.12.2018)

*டெங்கு கொசு ஒழிப்புக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வரும் 18ம் தேதிக்குள் சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ரூ.50,000/- அபராதம் விதிக்க நேரிடும். சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

*மேகதாதுவில் அணை கட்ட முதல் கட்ட ஆய்வுக்கு அனுமதியளித்த மத்திய அரசை கண்டித்து திருச்சியில்  திமுக, காங்கிரஸ், திக, மதிமுக, இடதுசாரிகட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் கண்டன போராட்டம் நடத்தி வருகின்றனர். 

*காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தாயார் சோனியா காந்தி ஆகியோரின் 2011-12ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கை மீண்டும் ஆய்வு செய்ய வருமான வரித்துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

*சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

*மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று வெளி நோயாளிகள் சேவையை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியிறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு கவனிக்க தவறும்பட்சத்தில் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.