சில வரிகளில் சில செய்திகள்  (05.12.2018)

சில வரிகளில் சில செய்திகள் (05.12.2018)

* சென்னை ஆதம்பாக்கத்தில் குளியலறை உட்பட வீட்டின் பல இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தி பெண்களை ரசித்த தனியார் விடுதி ஓனரை போலீஸார் கைது செய்தனர்.

*மழைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கன மழை மற்றும் வெள்ளம் முதலான அவசரகாலத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அடிக்கடி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால் பாடத்திட்டம் பாதிக்கப்படுவதால் இந்த அறிவிப்பு என தெரிகிறது.

*கோவை வனசரகத்திற்குட்பட்ட மதுக்கரையில் நாற்பது நாட்களுக்கும் மேலாக பொது மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

*தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நாளை கூடுகிறது.  மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றவே சட்டபேரவை நாளை கூட்டபடுவதாக கருதப்படுகிறது.

* முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

*ராஜஸ்தான் மற்றும் தெலுங்கனா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.

*இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்குமான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை அடிலைடில் துவங்குகிறது.

*ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகளில் இன்று நெதர்லாந்தும் ஜெர்மனியும் மோதுகின்றன. நேற்று இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று காலிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

*அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

*பங்குச்சந்தையில் பி.எஸ்.இ குறியீடு  239.33 புள்ளிகள் குறைந்து   35,895 ஆக இருந்தது  தேசிய பங்குசந்தை குறியீடு   83.75 புள்ளிகள் குறைந்து  10,786 ஆக இருக்கிறது.