சில வரிகளில் சில செய்திகள் (06.12.2018)

சில வரிகளில் சில செய்திகள் (06.12.2018)

*இந்த ஆண்டு சாகித்ய அகடமியின் தமிழ் மொழிக்கான விருது, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. "சஞ்சாரம்" என்ற அவரது நாவலுக்காக இந்த விருது  வழங்கப்படுகிறது.

*தமிழக சட்டபேரவையின் சிறப்பு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு கூடுகிறது. இதில் மேகதாது அணை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

* சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள் குறைந்து  ரூபாய்  73.99  டீசல் விலை லிட்டருக்கு  46 காசுகள் குறைந்து ரூபாய்  69.63 ஆகவும் உள்ளது.

*முதியவர்கள் தல யாத்திரை மேற்கொள்ள தில்லி அரசு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. "முக்ய மந்திரி தீர்த்த யாத்ரா யோஜனா" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்க்கை துணையுடன் இலவசமாக தல யாத்திரை மேற்கொள்ள முடியும். இந்த திட்டத்திற்காக தில்லி அரசு ரயில்வே துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

* டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரின் 63வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

* தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வரையாக வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் எனவே, மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

*புவனேஸ்வரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகளில் நேற்று ஜெர்மனி நெதர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் - மலேசியா இடையேயான மற்றொரு ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

*சவூதி அரேபியாவில் துருக்கி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்ட வழக்கில் சவூதி உளவுத்துறை அதிகாரிகள் இரண்டு பேரை கைது செய்ய துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.