சில வரிகளில் சில செய்திகள் (07.12.2018)

சில வரிகளில் சில செய்திகள் (07.12.2018)

*முப்படை வீரர்களை நினைவுகூறும் வகையில் 'கொடி நாள்' இன்று கடைபிடிக்கப்படுகிறது.  இதனையொட்டி தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பொதுமக்கள் தாராளமாக கொடிநாள் நிதி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

*தெலுங்கானா  மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் இன்று நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலின் வாக்குபதிவு துவங்கியது.

*குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் இன்று காலை நேரில் ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ உத்தரவிட்டுள்ளது.

*மயிலை கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை காணாமல் போனது தொடர்பாக விசாரிக்க மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

*ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168/- அதிகரித்துள்ளது.

*காஷ்மீரில் இந்திய பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார்.

*ஐ.நா பொருளாதார குழுவின் ஆசிய-பசிபிக் பிராந்திய பிரதிநிதியாக இந்தியாவின் ப்ரீதி சரண் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

* சென்னையில் பெட்ரோல் விலை  42 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.73.57 ஆகவும்,   டீசல் விலை  44 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.19 ஆகவும் உள்ளது.

* 'சர்கார்' படத்திற்கு ஆதரவாக பயங்கர ஆயுதங்களுடன் மிரட்டி சமூக வலை தளங்களில் வீடியோ பதிவிட்ட இரண்டு இளைஞர்களை   போலீஸார் கைது செய்தனர்.

* "மேகதாது அணை திட்டத்தை கைவிட முடியாது" என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

*மேகதாது திட்டத்தை எதிர்த்து நேற்று தமிழக சட்டபேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

*மேகதாது அணை தொடர்பாக பிரதமரை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

*புவனேஸ்வரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அர்ஜென்டினாவை   5-3 என்ற கோல் கணக்கில் வென்றது. நியூசிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடந்த மற்றொரு ஆட்டம் டிராவில் முடிந்தது. இன்று ஒரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் - சீனாவும் மற்றொரு போட்டியில்  அயர்லாந்து - இங்கிலாந்து அணிகளும் மோத உள்ளன.