சில வரிகளில் சில செய்திகள் (08.12.2018)

சில வரிகளில் சில செய்திகள் (08.12.2018)

* மேகதாது  அணைப்பிரச்சனையில் திமுக மற்றும் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருவதாக மத்திய அமைச்சர்               பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாற்றியுள்ளார்.

* மேகதாது பிரச்சனையில் தமிழகம் எடுக்கும் முடிவிற்கு பாஜக துணை நிற்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை               சௌந்திரராஜன் கூறியுள்ளார்.

*ஐந்து ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாத வனக்காப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

*காவிரி மேலாண்மை வாரியத்திற்கு முழுநேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

* கோவையில் சி.பி.ஐ அதிகாரி போல் நடித்து வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய ராஜகிரி என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

*  'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் திருப்பூரில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களை தூய்மைபடுத்தும் பணியில் எல்லை பாதுகாப்பு            படையினர் ஈடுபட்டுள்ளனர்.

* சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம், மடிப்பாக்கம், நீலாங்கரை மற்றும் அந்த பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்போர் லாரிகள் மூலம் கழிவுநீரை அப்புறப்படுத்த சென்னை குடிநீர் வாரியத்தை 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபட்டுள்ளனர்.

* வைகையாற்றின் குறுக்கே முள்ளிபள்ளம் தடுப்பணையிலிருந்துகிருதுமால் நதிக்கு நீர் திறக்ககோரி விவசாய சங்கத்தினர் இன்று மதுரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான சிறப்பு மலை ரயில் சேவை இன்று முதல் துவங்கியுள்ளது.

* வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* புவனேஸ்வரில்  நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று இந்தியா கனடாவை எதிர் கொள்கிறது.