சில வரிகளில் சில செய்திகள் (09.01.2019)

சில வரிகளில் சில செய்திகள் (09.01.2019)

* பொருளாதார ரீதியாக பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

*மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள சோலாப்பூர், துல்ஜாபூர் மற்றும் ஒச்மானாபாத் தேசிய நெடுஞ்சாலையை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

*கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டையில் காட்டுயானையை விரட்டும் போது உயிரிழந்த வனத்துறை காவலர் மாரப்பனின் குடும்பத்தினருக்கு வனத்துறை மூலம் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

*பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்றும் மத்திய அரசுடன் உறவு என்பது வேறு, கூட்டணி என்பது வேறு என்று மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை கூறியுள்ளார்.

* திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் அபராதம் விதிக்கப்படுவதுடன் உரிமமும் ரத்து செய்யப்படும் என்று மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரித்துள்ளார்.

*மகாராஷ்ட்ர மாநிலம் பூனேயில் இன்று துவங்கவிருக்கும் 'கேலோ இந்தியா' விளையாட்டுப்போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்.