சில வரிகளில் சில செய்திகள் (10.01.2019)

சில வரிகளில் சில செய்திகள் (10.01.2019)

* கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

*ஜி.எஸ்.டியின் 32வது கூட்டம் தலைநகர் தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி தலைமையில் துவங்கி நடைபெற்று வருகிறது. 

* பொதுத்துறை நிறுவனங்கள் திட்டங்களை குறித்த காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி கேட்டுக்கொண்டுள்ளார்.

*பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விவசாயிகளையும், மீனவர்களையும் பாதுகாக்க நபார்டு வங்கி உதவியுடன் 12 திட்டங்களை செயல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

*கிராமப்புற பெண்களின் மேம்பாட்டிற்காக இலவச நாட்டுக்கோழி வளர்க்கும் திட்டத்தை முதலைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.

* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 14,263 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

*பிளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

* ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டது லிக்டர் அளவு கோலில் இது 4.6ஆக பதிவானது.