சில வரிகளில் சில செய்திகள் (10.12.2018)

சில வரிகளில் சில செய்திகள் (10.12.2018)

*இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம், இதனையொட்டி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,"இந்திய அரசியல்  சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனி நபர் கண்ணியம், நாட்டின் ஒற்றுமை ஆகியவற்றை உறுதி செய்துள்ளது." என்று கூறியுள்ளார்.

* மூதறிஞர் ராஜாஜியின் 140வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

* ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.

*கர்நாடகாவின் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனைக்கட்டுவது தொடர்பான திட்ட வடிவமைப்பை கைவிடுமாறு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமாருக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.

*முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்திரவிடக்கோரி பாமக தலைவர் ஜி.கே.மணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

*தில்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதின் தர்காவிற்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுவது குறித்து, மத்திய அரசு, டில்லி அரசு மற்றும் டில்லி காவல்துறை  ஆகியோர் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பும் படி டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

*பிரான்ஸ் நாட்டில் நடக்கும் கிளர்ச்சிகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்துக்கு பிரான்ஸ் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

* பெண்கள் பாதுகாப்புக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 181 கட்டணமில்லா தொலைப்பேசி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.

*உலக அளவில் வாகன இன்ஜின் ஆயிலுக்கு பெயர் பெற்ற ஷெல் நிறுவனம் சமீபத்தில் "Make the Future India" என்னும் நான்கு நாள் கருத்தரங்கை சென்னையில் நடத்தியது. இதில் சர்வதேச புகழ்பெற்ற GMD நிறுவனம் தயாரித்த OX  என்னும்  Flat Pack Truck இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவெடுத்திருக்கிறது அந்நிறுவனம்.

*தெற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இந்திய பெருங்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியிருக்கிறது. இது [புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.