சில வரிகளில் சில செய்திகள் (11.01.2019)

சில வரிகளில் சில செய்திகள் (11.01.2019)

* தமிழகத்தின் அனைத்து  பள்ளிகளிலிலும்  இன்னும் 15 நாட்களில் பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

*தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சிவகங்கை மாவட்டத்தில் 'தூய்மை இந்தியா' திட்டத்தை துவங்கி வைத்தார்.

*நிலவை ஆராய இந்தியாவால் ஏவப்பட உள்ள 'சந்திராயன் - 2' வரும் ஏப்ரல் மாதம் மத்தியில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியுள்ளார்.

*சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கு பெற உள்ள தனியார் நிறுவனங்களின் பின்னணியை ஆராய கோரும் மனுவிற்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

*வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 15வது மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி வரும் 21ம் தேதி வாரணாசியில் துவக்கி வைக்கிறார்.

*வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டின் முதல் நாள் இளைஞர்களுக்கு அற்பணிக்கபடுகிறது.

*"இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், அதன் அமைச்சர்கள் பயங்கரவாத தலைவர் ஹபீத் சையத்தை சந்தித்து பேசுகிறார்கள்." என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.