சில வரிகளில் சில செய்திகள் (11.12.2018) - காலை

சில வரிகளில் சில செய்திகள் (11.12.2018) - காலை

*நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஜனவரி மாதம் 8ம் தேதி வரை நடைபெறும். இன்று இரு அவைகளிலும் மறைந்த உறுப்பினர்களுக்கும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கும் அஞ்சலி செலுத்தியபின் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

*நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எந்த விவகாரம் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

* முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

*அரசு பணிகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

*சென்னையில் பெட்ரோல் விலை 10 காசுகள் குறைந்து லிட்டர் 72.82 ரூபாய் ஆகவும், டீசல்  விலை 15 காசுகள் குறைந்து லிட்டர்  68.26 ரூபாயாகவும் உள்ளது.

*புவனேஸ்வரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெல்ஜியம் பாகிஸ்தானையும், நெதர்லாந்து கனடாவையும் எதிர்கொள்கின்றன.

*சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூபாய்.24,320ஆக உள்ளது.