சில வரிகளில் சில செய்திகள் (11.12.2018) - மாலை

சில வரிகளில் சில செய்திகள் (11.12.2018) - மாலை

* பிரான்ஸில் வரி உயர்வை கண்டித்து சுமார் 1 மாத காலமாக போராட்டங்கள் நடந்து வந்தன. இதனை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் அடிப்படை ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றும், சில வரிசலுகைகளும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். எனினும், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார்.

*5 மாநில சட்டபேரவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

*5 மாநில தேர்தல் முடிவுகள் நிலவரத்தில் மத்திய பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது தாயாரும், காங்கிரஸின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தியுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

*சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை மதிமுக தலைவர் வைகோ சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,"திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை. எங்களுக்குள் யாரும் சிண்டு முடிய முடியாது." என்றார்.

*மகாகவி பாரத்யாரின் 137வது பிறந்த நாள் விழா நெல்லையில் உள்ள இந்து கல்லூரி பள்ளியில் கொண்டாடப்பட்டது. அப்போது, அவர் பயின்ற வகுப்பறையில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கூடி பாரதியார் பாடல்களை பாடினர். பின்னர், பாரதியின் கனவை நினைவாக்குவோம் என்று உறுதி மொழி ஏற்றனர்.

*நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் எழுத படிக்க தெரியாத கிராமப்புற மக்களுக்கு தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் இலவசமாக மனுக்களை எழுதித் தருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் இந்த சேவையை செய்து வருகின்றனர்.

* செல்லப்பிராணியாக நாய் வளர்ப்பவர்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் 23% குறைவாகவும், மற்ற நோய்கள் வரும் வாய்ப்பு 20% குறைவாகவும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.