சில வரிகளில் சில செய்திகள் (12.01.2019)

சில வரிகளில் சில செய்திகள் (12.01.2019)

*தமிழக முதலமைச்சருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் கருத்து தெரிவித்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

* அரசு பள்ளிகளில் 5 ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தால், விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

*எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மக்கள் நல திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

*பூனேயில் நடைபெற்று வரும் இளையோர் விளையாட்டு போட்டிகளில் மகாராஷ்ட்ரா 92 பதக்கங்களுடன் முதலிடத்திலும் 32 பதக்கங்களுடன் தமிழகம் 5வது இடத்திலும் உள்ளது.

*பிரிமியர் பாட்மிட்டன் லீக் அரையிறுதி போட்டியில் இன்று ஹைதிராபாத் மும்பை அணிகள் மோதுகின்றன.