சில வரிகளில் சில செய்திகள் (12.12.2018) - மாலை

சில வரிகளில் சில செய்திகள் (12.12.2018) - மாலை

* 2025 ஆண்டுக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  2.5% பங்கை பொது சுகாதரத்துறைக்கு செலவழிக்க உத்தேசித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

* 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் மூலம் 5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் சுகாதார வசதி பெற்று வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.

* மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கமல்நாத் ஆளுநர் ஆனந்தி பென் படேலை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

*உலக மகளீர் குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன்ஷிப் வென்ற குத்து சண்டை வீராங்கனையும், மாநிலங்களவை உறுப்பினருமான மேரி கோமிர்க்கு மாநிலங்களவை தலைவர் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பாராட்டு  தெரிவித்தார்.

*தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் G SAT 11ஐ வெற்றிகரமாக விண்ணில் ஏவியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மாநிலங்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

*சென்னை - கன்னியாகுமரி இடையேயான தொழிற்தடதிட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கான இணைய தள வசதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவங்கி வைத்தார்.

* பாலில் கலப்படம் செய்பவர்கள்  மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும்,  அவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அடுத்த மாதம் 21ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைப்பெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ.விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்  கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

*கோவை, சேலம், திருச்சி, நெல்லை, மதுரை, நாகர்கோவில் ஆகிய மண்டலங்களில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் ஆன்-லைன் பண பரிவர்த்தனை துவங்கப்பட்டுள்ளதாக, வருங்கால  வைப்பு நிதி ஆணையர் மதியழகன் தெரிவித்துள்ளார்.

*புவனேஸ்வரில் நடைபெறும் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் அர்ஜென்டினா - இங்கிலாந்து அணிகளும், ஆஸ்திரேலியா - பிரான்ஸ் அணிகளும் மோதுகின்றன.