சில வரிகளில் சில செய்திகள் (14.12.2018)

சில வரிகளில் சில செய்திகள் (14.12.2018)

* நாடாளுமன்ற இரு அவைகளும் வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

*ரபேல் விமான  ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது காங்கிரஸ் கட்சி கூறிய குற்றசாட்டுகள் அடிப்படையற்றவை என்பதை நீருபித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

* மத்திய பிரதேசத்தில் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத் வரும் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார்.

*தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் செயல் தலைவராக தனது மகன் தாரக் ராமாராவை அக்கட்சியின் தலைவரும், தெலுங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் நியமித்துள்ளார்.

*வளர்ந்து வரும் தொழிர்நுட்பங்களை ஆசிரியர்களும் அறிந்து கொள்ள அவர்களுக்கும் வரும் கல்வியாண்டு முதல் மடிகணினி வழங்க அரசு பரிசீலித்து வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

* வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்  போட்டியில்  முதல் நாளான இன்று சற்று முன் வரை ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு  266 ரன்கள் எடுத்திருந்தது. 

*சமீபத்தில் தனது ஓய்வினை அறிவித்த கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் முன்னர் ஐ.பி.எல் தொடரில் விளையாடிய போது சம்பளம் வேண்டாம் என்று கூறியிருந்தார். அது பற்றி தற்போது பேசிய அவர்,"அப்போது நான் 2.80 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டேன். நான் அடித்த 100 ரன்களுக்கு இது அதிகம் என நான் உணர்ந்தேன்" என்று கூறியுள்ளார்.