சில வரிகளில் சில செய்திகள் (15.12.2018)

சில வரிகளில் சில செய்திகள் (15.12.2018)

* இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சுதந்திர இந்தியாவின் முதல் துணைப்பிரதமர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

* 'கஜா' புயல் பாதிப்புகளில் அரசியல் செய்வது நாகரீகமற்றது என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

* மிசோரமின் புதிய முதலமைச்சராக மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் ஜோரம் தங்கா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

* வங்ககடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயாக வலுவடைந்து நாளை மறுநாள் ஓங்கோலுக்கும் காக்கிநாடாவிற்கும்  இடையே கரையை கடக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.