சில வரிகளில் சில செய்திகள் (16.01.2019)

சில வரிகளில் சில செய்திகள் (16.01.2019)

*9தாவது சர்வதேச நுண்ணீர் பாசன மாநாடு இன்று மகாரஷ்டர மாநிலம் அவுரங்காபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் 576 நாடுகளை சேர்ந்த 740 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டுள்ளனர். 

*திருவள்ளுவர் தினத்தை ஒட்டி குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் ,"திருவள்ளுவரின் போதனைகள் காலத்தை வென்றவை." என்று கூறியுள்ளார்.

*மறைந்த தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் மணி மண்டபம் மற்றும் முழு உருவ வெண்கல சிலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் திறந்து வைத்தார்.

*இன்று மாட்டு பொங்கல் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு 1000 கிலோ எடை கொண்ட காய்கறிகள், பழங்கள்,இனிப்பு வகைகளை கொண்டு அலங்காரம் மற்றும் பூஜை செய்யப்பட்டது. 

* திருவிடைமருதூர் அருகே உள்ள கோவிந்தப்பாடி விக்டர் ருக்மிணி ஆலயத்தில் 600 பசுக்களுக்கு மக்கள் ஒரே நேரத்தில் பூஜை செய்தனர்.

*மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

*கன்யாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு தலைவர்களும், அறிஞர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

*நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுவதை ஒட்டி சென்னையை சுற்றியள்ள சுற்றுலாத்தலங்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் 480 சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது.