சில வரிகளில் சில செய்திகள் (17.01.2019)

சில வரிகளில் சில செய்திகள் (17.01.2019)

.*ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது.

* முன்னாள் தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 102வது பிறந்தநாள் விழாவை ஒட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது உருவ சிலைக்கு தமிழக முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

* காணும் பொங்கலை தமிழக மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி மக்கள் அதிகமாக கூடும் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* நாகை மாவட்டம் திருகடையூரில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயங்கள் நடைபெற்று வருகின்றன.

*அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. லிக்டர் அளவுகோலில் இது 6.0 ஆக பதிவானது.

*மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிடன் போட்டிகளில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.