சில வரிகளில் சில செய்திகள் (18.01.2019)

சில வரிகளில் சில செய்திகள் (18.01.2019)

*துடிப்பான குஜராத் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று காந்திநகரில் துவக்கி வைத்தார்.

* பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க உத்திரப்ரதேச அரசு முடிவு செய்துள்ளது.

* இலங்கை கடற்படையின்  ரோந்து கப்பல் மோதியதில் உயிரிழந்த மீனவரின் உடலுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

* உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

*இஸ்ரோ இந்த ஆண்டு 32 திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

*இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவராக முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சே இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.