சில வரிகளில் சில செய்திகள் (19.01.2019)

சில வரிகளில் சில செய்திகள் (19.01.2019)

* தமிழகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்  என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

* 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் மதுரை மாநகரில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று துவக்கி வைத்தார்.

*இந்தியாவின் அதி வேக ரயிலை வாங்க சிங்கப்பூர் மற்றும் மலேஷியா நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

*ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 16 ரூபாய் குறைந்துள்ளது.