சில வரிகளில் சில செய்திகள்  (19.12.2018)

சில வரிகளில் சில செய்திகள் (19.12.2018)

*பேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனத்தில் இந்திய வம்சாவளி அதிகாரி கரன்தீப் ஆனந்த் தலைமை பதிவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இது வரை பேஸ்புக் நிறுவனத்தின் சீனியர் எக்சிகியூட்டிவ் ஆக பணியாற்றியவர் கரன்தீப் ஆனந்த்.

* கர்நாடக அரசு அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான கட்டணத்தை 200% உயர்த்தி 50,000/- ரூபாயாகவும் மருத்துவ மேற்படிப்புக்கான கட்டணத்தை 50,000 ரூபாயிலிருந்து 3,00,000 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது.

* மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க ரூ.220கோடி செலவில் வெட்டு வென்னி பம்மம் இடையே இரண்டரை கீ.மி இரும்பு பாலம் இன்று பயன்பாட்டிற்கு வந்தது. தென்ன்னிந்தியாவிலேயே நீளமான இரும்புப்பாலமாகும் இது.

*மதுரை பூமாலை வணிக வளாகத்தில் வீணாகக் கொட்டப்படுகின்ற பூக்கள் உள்ளிட்ட மக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்து உரமாக மாற்றும் திட்டம் இரண்டு மாதங்களாக சோதனை முறையில் செயல்ப்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டம் இப்போது முழு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

*கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அவ்வூர் மக்கள் தாங்கள் அன்றாடம் கூலி வேலை செய்து சேர்த்த ரூ.3 லட்சத்தை கல்வி சீராக வழங்கியுள்ளார்கள்.

*நாமக்கல் மாவட்டம், பிள்ளாநல்லூர் அருகில் உள்ள நாமகிரிப்பேட்டையில் 5 ஆண்டுகளாக மருந்து கடை நடத்தி வந்த தமிழ் செல்வன், இளவரசன் ஆகியோர் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல் அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

* கோவை வணபகுதியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த 'விநாயகன்' யானையை பிடித்து முதுமலைக்கு அனுப்பி வைத்துள்ளனர் வனத்துறையினர். என்னதான் 'விநாயகன்' பயமுறுத்தினாலும் அவன் பிரிவால் வாடும் கோவைவாசிகள் அதனை தெரிவிக்க மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

* ஐ.பி.எல் போட்டிகளுக்கு அதிகபட்ச தொகையாக ரூ.8.4 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி பந்து வீச்சில் தனக்கு அணில் கும்ளே தான் முன்னுதாரணம் என்று கூறியுள்ளார்.