சில வரிகளில் சில செய்திகள் (20.12.2018)

சில வரிகளில் சில செய்திகள் (20.12.2018)

* தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் இனி கே.ஜி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

*மதுரை மாநகராட்சியின் தொகுப்பூதிய துப்புரவு பணியாளர்களுக்கு இந்த மாதம் முதல் மாதம் ரூ.16,725 சம்பளம் வழங்க வேண்டும் என்று மதுரை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

* நீலகிரி மாவட்டம் ஊட்டி பேருந்து நிலையம் அருகே செயல்பாடு வரும் மரவியல் பூங்காவிற்கு செல்ல கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு  ரூ.10/- என்றும் சிறுவர்களுக்கு ரூ.5/- என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் இன்று பாதிக்கப்பட்டன.

* 'மேகதாது அணை' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

* "உணவு பொருட்கள் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

*"மக்கள் பிரதிநிதிகளுக்கு நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம்." என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.

* ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற குடிமை பணிகளுக்கான தேர்வுகளை எழுதும் பொது பிரிவினருக்கான வயது உச்ச வரம்பை 30லிருந்து 27 ஆக குறைக்க வேண்டும் என்று நிதி ஆயாக் அமைப்பு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

*மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்பில்லை என்றும் அதில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டு வருவதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியுள்ளார்.

*'கஜா' புயல் நிவராண நிதி குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு கூறியுள்ளது.

*திரைப்பட தயாரிப்பாளர் சங்க பிரச்சனை தொடர்பாக அதன் ஒரு பிரிவினர் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினர்.

* விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சு நடத்த மாநில அரசு தயாராக இருப்பதாக மின் துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

* ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு வரும் 25ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

* 'ஸ்டெர்லைட்' ஆலையை மூடுவதற்கு வகை செய்யும் தீர்மானத்தை தமிழக அரசு  சட்டபேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியிறுத்தி உள்ளது.

* சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு டிஜிட்டல் பேனர் வைப்பதை தவிர்க்குமாறு பாமகவினரை அக்கட்சியின் தலைவர் ராமதாசு கேட்டுக்கொண்டுள்ளார்.

*மதுரையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் வைகையாற்று படுகையை தூய்மைபடுத்தும் பணி இன்று நடைபெறுகிறது.

* இலங்கையில் இன்று 28 அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர்.

* தென் தமிழகத்தின் சில பகுதிகளில் நாளையும் நாளை மறு நாளும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

*ப்ரோ-கபடி லீக் போட்டியில் இன்று ஜெய்பூர் அணியும் டில்லி அணியும் மோதுகின்றன.