சில வரிகளில் சில செய்திகள் (21.01.2019)

சில வரிகளில் சில செய்திகள் (21.01.2019)

*எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 13ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேரையும் இலங்கை நீதிமன்றம் எச்சரித்து விடுதலை செய்தது.

* சி.பி.ஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன்னை விடுவித்துக்கொண்டுள்ளார்.

* 15வது வெளிநாடு வாழ் இந்தியர் மாநாடு உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று துவங்கியது.இதன் துவக்க நிகழ்ச்சியில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்,"வெளிநாடு வாழ் இந்தியர் ஓவ்வொருவரின் வெற்றியும் இந்தியாவிற்கு புகழ் சேர்த்து தந்துள்ளது." என்று கூறியுள்ளார்.

*மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் அமைக்கப்பட்ட தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் இந்த மாநில மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

*தெலுங்கானா மாநிலத்தில் முதல் ஊராட்சி தேர்தல் இன்று நடைபெற்றது.

*உத்திரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்று வரும் கும்ப மேளாவில் இன்று ஏராளமானோர் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.

*இன்று தமிழகத்தின் அனைத்து முருகத்தலங்களிலும் தைபூசத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

* வடலூரில் இன்று நடைபெற்ற தைப்பூச ஜோதி தரிசன நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.