சில வரிகளில் சில செய்திகள் (22.01.2019)

சில வரிகளில் சில செய்திகள் (22.01.2019)

* தமிழகத்தில் முதல் முறையாக அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி யூ.கே.ஜி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.

* சர்வதேச உவர் நீர் மீன் விவசாயிகள் மாநாடு இன்று சென்னையில் துவங்கியது. தமிழக மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இந்த மாநாட்டை துவக்கி வைத்தார்.

*தமிழகத்தில் அரசு, அரசு சார் உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் சாலை பாதுகாப்பு மன்றம் துவக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்.

*இஸ்ரோ தலைவர் சிவன் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.14,34,000யை காசோலையாக வழங்கினார்.

* அரசு நிலங்களை ஆக்கிரமித்தி கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத்தலங்கள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* தமிழக காவல்துறை, கடலோர காவல் படை மற்றும் கடற்படை ஆகியவை இணைந்து தமிழக கடலோர மாவட்டங்களில் 'sea vigil' என்ற பாதுகாப்பு ஒத்திகையை நடத்துகின்றன. தமிழக கடல் பகுதியில் கடல் வழி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.