சில வரிகளில் சில செய்திகள் (22.12.2018)

சில வரிகளில் சில செய்திகள் (22.12.2018)

*  இந்திராகாந்தி கொலைக்கு பின் சீக்கியர்கள் மீது ஏவப்பட்ட வன்முறைகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத ராஜீவ் காந்திக்கு கொடுக்கபபட்ட 'பாரத ரத்னா' விருதை திரும்பப்பெற வேண்டும் என்று தில்லி சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

*சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குழுமத்தின் கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி தலைமையில் புது தில்லியில் இன்று நடைபெற்றது. 

*28% சதவிகித வரி வரம்பிற்குள் இடம்பெற்றிருந்த  23 பொருட்களின் வரி குறைக்கப்பட்டிருப்பதாக மாநில அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

*தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை,கரும்புத்துண்டு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை இருக்கும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

*ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

*தமிழகத்தில் 60 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

*ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்றால் தான் இனி ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

*தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு 60% குறைக்கப்பட்டிருப்பதாக தமிழக சுற்று சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கூறியுள்ளார்.

*தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

*பிரீமியர் பாட்மிட்டன் லீக் போட்டி இன்று மும்பையில் தொடங்குகிறது. 

*ப்ரோ கபடி லீக் போட்டிகளில் மும்பை - உத்திரபிரதேச அணிகளும், பெங்கால் - பாட்னா அணிகளும் மோதுகின்றன.