சில வரிகளில் சில செய்திகள் (24.01.2019)

சில வரிகளில் சில செய்திகள் (24.01.2019)

*பொதுத்தேர்தல்களில் வாக்குசீட்டு முறைக்கு திரும்பும் பேச்சுக்கே இடமில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

*பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனேகா காந்தி கூறியுள்ளார்.

*சென்னை கிண்டியில் உள்ள மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழிநுட்ப கல்வி நிறுவனம் உலக அளவில் பிரசித்தி பெற்று திகழ்வதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.

*சந்திரனில் உள்ள ஹீலியம் 3 வாயுவை கொண்டு வருவதற்கு ரோபோ ஒன்றை சந்திரனுக்கு அனுப்ப இஸ்ரோ தயாராகி வருவதாக பிரபல ஏவுகணை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை கூறியுள்ளார்.

*மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு முடக்கப்பட்ட சொத்துக்கள் பட்டியலில் இருப்பதாக வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.