சில வரிகளில் சில செய்திகள் (24.12.2018)

சில வரிகளில் சில செய்திகள் (24.12.2018)

*முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான 'பாரத ரத்னா' எம்.ஜி.ஆரின் 31வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

*தமிழ்நாட்டில் 16 நிறுவனங்களில் ரூ.12,000 கோடி முதலீடு செய்வது என்று இன்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதன் மூலம் 30,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று தெரிகிறது.

* நெல்லை, மதுரை மற்றும் கரூர் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு இந்த ஆண்டு கூடுதலாக 350 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக  தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

* மத்திய அரசு ஜி.எஸ்.டியில் வரியை குறைத்துள்ளதன் மூலம், சாதாரண மக்கள் பயன்படுத்தும் பல பொருட்களின் விலை 0% முதல் 5% சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி கூறியுள்ளார்.

* பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிஸா மாநிலத்தில் சுமார் ரூ.15,000 கோடி மதிப்பிலான நல திட்டங்களை இன்று துவங்கி வைக்கிறார்.

* வட மாநிலங்களில் கடும் குளிரும், பனி பொழிவும் நிலவி வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படடுள்ளது.

*பூட்டான் பிரதமர் டாக்டர்.லியோன் சென் லோட்டே வரும் 27ம் தேதி முதல் 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

*நாடு முழவதும் உள்ள மகளீர் தங்கும் விடுதிகளில் தவறு நடக்காதபடி தடுக்க அரசு நடவடிக்கை  எடுத்து வருகிறது என்று மகளீர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.

*மேற்கு வங்கத்தில் ரதயாத்திரைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக பாஜக கூறியுள்ளது.

*இந்தோநேஷ்யாவில் கடலுக்கடியில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமியால் இறந்தவர்கள் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரை தேடி வருகின்றனர். இந்தோனேஷ்யாவிற்கு தேவையான அனைத்து உதவிகளும்  வழங்கப்படும்  இந்தியா கூறியுள்ளது.