சில வரிகளில் சில செய்திகள்  (25.01.2019)

சில வரிகளில் சில செய்திகள் (25.01.2019)

* குடியரசு தினத்தை ஒட்டி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "நமது ஆதார வளங்களை கொண்டு நாட்டை வளப்படுத்த இந்த நாளில் உறுதியேற்போம்." என்று கூறியுள்ளார்.

* இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள தென்னாபிரிக்க அதிபர் சிறில் ரம்போசாவுடன் பிரதமர் இருதரப்பு பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து விவாதித்தார்.

* பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

*மதுரை, திருநெல்வேலி. தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைகளை பிரதமர் திறந்து வைப்பார் என்று மாநில அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

*2015ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் எவ்வளவு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன, எத்தனை தொழில்கள் துவக்கப்பட்டுள்ளன, எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

*இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மிட்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.