சில வரிகளில் சில செய்திகள் (25.12.2018)

சில வரிகளில் சில செய்திகள் (25.12.2018)

* விவசாயிகளின் அனுமதி பெறாமல் விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட மாட்டாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார். மக்களிடம் பாஜக அரசின் சாதனைகளை கூறி வாக்கு கேட்போம் என்றும் அவர் கூறினார்.

* புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அரசு ஆக்கிரமிப்பு நிலங்களை வரைமுறைபடுத்துவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

*ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

* திருவள்ளூர் மாவட்டத்தில் முக நூல் காதலனுக்காக பெற்ற தாயை கூலிப்படையை ஏவி கொலை செய்த கல்லூரி மாணவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

*மத்திய பிரதேச அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 28 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

*சத்தீஸ்கர்  அமைச்சரவையும் இன்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 9 பேர் புதிய அமைச்சர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் பெண்.

*உச்ச நீதிமன்ற இடைக்கால தீர்ப்பின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பட்டாசு உற்பத்தியில்  உடனடியாக ஈடுபடுமாறு சிவகாசி, பட்டாசு நிறுவனங்களை விருது நகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் கேட்டுக்கொண்டுள்ளார்.

*தொடர்ச்சியான விடுமுறை நாட்களால் தமிழக சுற்றுலா தலங்கள் களைகட்டியுள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன சூழல் சுற்றுலா இன்று முதல் ஜனவரி 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

*இந்தோனேஷியாவில் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 429ஆக உயர்ந்துள்ளது. 

*பிரிமியர் லீக் பாட்மிட்டன் போட்டியில் இன்றிரவு ஹைதிராபாதில் நடைபெற உள்ள ஆட்டத்தில் ஹைதிராபாத் - சென்னை அணிகள் மோதுகின்றன.

* ஆஸ்திரேலியாவில் நாளை இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துவங்க உள்ளது. முதல் இரண்டு போட்டிகள் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சம நிலையில் உள்ளன.

*மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முரளி விஜய், கே.எல்.ராகுல் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மயங்க் அகர்வால், ஹனும விஹாரி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.