சில வரிகளில் சில செய்திகள் (27.12.2018)

சில வரிகளில் சில செய்திகள் (27.12.2018)

* எதிர்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை இன்று முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டது.

* இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.

*தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தில்லியில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து 2018-19ம் ஆண்டுக்கு தமிழ்கத்திற்கு வழங்க வேண்டிய ரூ.7,153 கோடி அடிப்படை மானியத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். முன்னதாக அவர் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெயிட்லியையும் சந்தித்தார்.

*தமிழ்நாடு அறிவியல் தொழிற்நுட்ப மாநில மன்றத்தின் வாயிலாக கடந்த 3 ஆண்டுகளுக்கான தமிழக அறிவியல் அறிஞர் விருதுகளை 29 பேருக்கு சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

* சாத்தூர் கர்ப்பிணி பெண்ணிற்கு ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தபட்ட விவகாரத்தில் சுகாதாரத்துறை பணியாளர்கள் மீது 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெறும் வகையில் சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

* ஊதிய சம உரிமை கோரி இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது.

*நாமக்கல்லில் எரிசாராயம் கடத்திய 2 பேரை போலீஸார் கைது செய்தனர். கடத்த பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.

*சென்னை விமான நிலைய வளாகத்தில் பயணியரின் வசதியை கருதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

*திடீர் பயணமாக இராக் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,"இனி அமெரிக்கா எந்த நாட்டிற்கும் போலீஸ் வேலை பார்க்காது". என்று கூறியுள்ளார்.

*,மெல்போர்னில் நடைபெற்றுவரும் ஆஸ்த்ரேலியாவிற்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 443 ரன்களை எடுத்த இந்தியா டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா ஆட்ட நேர முடிவில்  8 ரன்கள் எடுத்துள்ளது.

*இந்திய அணியில் புஜாரா 106 ரன்களும்,  கோலி  82 ரன்களும், ரோஹித்  63 ரன்களும் எடுத்தனர்.