சில வரிகளில் சில செய்திகள் (28.01.2019)

சில வரிகளில் சில செய்திகள் (28.01.2019)

* பிரபல பாலிவுட் நடிகை இஷா கோபிகர் நேற்று பாஜகவில் இணைந்தார்.

* அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டுள்ள வெளிநாட்டவரின் எண்ணிக்கை விவரங்களை மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியிலிருக்கும் தேர்தலோடு தொடர்புடைய அலுவலர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

* இரண்டு நாட்கள் தொடர் விடுமுறையை சாதகமாக்கி திருச்சியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பின்புற சுவரில் துளையிட்டு 5 கோடி ரொக்கம் மற்றும் 500 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.