சில வரிகளில் சில செய்திகள் (28.12.2018)

சில வரிகளில் சில செய்திகள் (28.12.2018)

*"யோகாவின் மறுபெயர் ஒன்று சேருதல் என்றும் அது இந்தியாவின் மென்மையான சக்தியை உலகிற்கு உலகிற்கு உணர்த்துவது" என்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

*பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

*ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கான சட்டபூர்வ தீர்மானம் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

*ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை எப்போது வேண்டுமானாலும் நடத்த தயார் என்றும் ஆனால், அது பற்றி தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

*பொங்கல் பண்டிகைக்கு ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.

*தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான தேர்வு குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.

*பிளாஸ்டிக் தடைக்கு கால அவகாசம் ஜனவரி 1இம் தேதிக்கு பின் நீட்டிக்கப்படாது என்று தமிழக சுற்று சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளார்.

* விருப்பப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகளை காண தனித்தனி கட்டணம் செலுத்தும் முறை ஜனவரி 31இம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.