சில வரிகளில் சில செய்திகள்  (29.01.2019)

சில வரிகளில் சில செய்திகள் (29.01.2019)

* போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் இன்று போராட்டத்தை கை விட்டு பணிக்கு திரும்பி விட்டனர்.

* உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று பிரயாக் ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராடினார்.

* காந்தி நினைவு நாளை முன்னிட்டு நாளை ஒரு நாள் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

* பொதுத்தேர்தலுக்கு கூட்டணி அமைத்துள்ள எதிர்கட்சிகள் கொள்கையின்றி, தலைவரின்றி உள்ளதாகவும், நிலையான ஆட்சியை அவர்களால் எப்படி கொடுக்கமுடியும் என்றும் பாஜக தலைவர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

* அஜீத் குமார் நடித்து பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிவரும் 'விஸ்வாசம்' இது வரை ரூ.180 கோடி வசூல் செய்திருப்பதாக பாக் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

*சென்னை, கோவை மாநாகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்த பொதுத்துறை செயலர் அனுமதி அளித்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


*நியூஸ்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய மகளீர் கிரிக்கெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.