சில வரிகளில் சில செய்திகள்  (29.12.2018)

சில வரிகளில் சில செய்திகள் (29.12.2018)

* தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தின் துணை வேந்தராக டாக்டர் சுதா சேஷையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

*தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணியை அமைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.

*"பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு" மராத்தான் ஓட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெற்றது.

*தமிழகத்தில் லோக் ஆயுக்தா தேடுதல் குழு தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

*வேளாண் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

*பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர் நீரவ் மோடி பிரிட்டனில் உள்ளதாக அந்நாடு உறுதிபடுத்தியுள்ளது.

*சென்னை தேனாம்பேட்டை - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவை ஜனவரி இறுதி வாரத்தில் துவங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

*ஈரோடு மாவட்டம் சத்யமங்கலம் புலிகள் காப்பகத்தில் முதல் முறையாக பறவைகள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது.

*பிலிபைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டது.இது லிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவானது.

*மெல்பௌர்னில் நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு  258 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு  399 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணைத்துள்ளது.