சில வரிகளில் சில செய்திகள் (30.01.2019)

சில வரிகளில் சில செய்திகள் (30.01.2019)

* பண ம்திப்பிழப்பு நடவடிக்கை காரணமாக குறைந்த செலவில் வீட்டு வசதி கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

*நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை  துவங்க உள்ளது. இது சுமூகமாக நடைபெற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

*அனைத்து அரசு பள்ளிகளிலும் இஸ்ரோ தொழிற்நுட்ப உதவியுடன் நவீன அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

*தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அலங்கார வாகனங்கள் அணி வகுப்பில் தமிழக அரசு சார்பில் கலந்து கொண்ட கலைக்குழுவிற்கு பாதுகாப்புத்துறையின் முதல் பரிசு கோப்பை வழங்கபட்டுள்ளது.

*எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் தெரிவித்துள்ளது.

*ஸ்பெயினுக்கு அணிக்கு எதிரான மூன்றாவது மகளீர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.