சில வரிகளில் சில செய்திகள்  (31.12.2018)

சில வரிகளில் சில செய்திகள் (31.12.2018)

*எதிர்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற மாநிலங்களவை நாளை மறுநாள் வரை ஒத்திவைக்கப்பட்டது.

* நாளை 2019 ஆங்கில புத்தாண்டு பிறப்பதையொட்டி தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

* பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளதையடுத்து போட்டியாளர்கள் தங்கள் மாடுகளை தயார் செய்து வருகிறார்கள்.

*தமிழகத்தில் பிளாஸ்டிக்  மீதான தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

*நாட்டின் தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவா நியமிக்கப்பட்டுள்ளார்.

*தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 24% குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

*பிரீமியர் பாட்மிட்டன் லீக் போட்டியில் சென்னை அணி அகமதாபாத் அணியை 6-0 என்ற ஆட்ட கணக்கில் வென்றது.

*ஆசிய கோல்ப் போட்டியில் பங்கேற்க இந்தியாவின் ஆதில் பேடி தகுதிப்பெற்றுள்ளார்.