சிவகாசியில் இன்று கடையடைப்பு

சிவகாசியில் இன்று கடையடைப்பு

பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய அறிவுறுத்தி பட்டாசு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், பசுமை பட்டாசுகள் சாத்தியமில்லை என்று கூறி சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால், சிவகாசி, திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் 10,000க்கும் மேற்ப்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.