சி.ஆர்.பி.எஃப், நக்சல்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு

சி.ஆர்.பி.எஃப், நக்சல்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு

ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையிலான, பா.., அரசு அமைந்துள்ளது. நக்சல் பிரச்னை உள்ள இந்த மாநிலத்தில், மேற்கு சிங்பம் மாவட்டத்தில், நக்சல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூடியுள்ளதாகவும், நாசவேலையில் ஈடுபட உள்ளதாகவும், போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுஅதன்படி, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள், மாநில போலீஸ் அடங்கிய குழு, வனப் பகுதியை சுற்றி வளைத்தது. அங்கு, 24 நக்சல்கள் கூடியிருந்தனர். சரணடையும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால், கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்த நக்சல்கள், துப்பாக்கியால் சுடத் துவங்கினர்


சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மற்றும் போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, நக்சல்கள் தப்பிச் சென்றனர். அந்தப் பகுதியில் நடத்திய சோதனையின்போது, ஒரு பெண் நக்சல், பலத்த காயங்களுடன் இருப்பதை, பாதுகாப்புப் படை வீரர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த பெண் நக்சல், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த பெண் நக்சலுக்கு, மூன்று, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் ரத்த தானம் செய்தனர். இதற்கிடையில், வனப்பகுதியில் இருந்து, ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வீரர்கள் கைப்பற்றினர். மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த, நக்சல் முகாம்களையும் அழித்தனர்.