சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் கினஸ் உலக சாதனையை முறியடித்துள்ளது பாரதீய ஜனதா கட்சி

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் கினஸ் உலக சாதனையை முறியடித்துள்ளது பாரதீய ஜனதா கட்சி

ஹைதராபாத்: சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் கினஸ் உலக சாதனையை முறியடித்துள்ளது பாரதீய ஜனதா கட்சி என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

“நாங்கள் இந்தியா முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறோம். முன்னதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி 8 கோடி உறுப்பினர்களுடன் கினஸ் உலக சாதனை படைத்தது, ஆனால் பாஜக இப்போது இந்த சாதனையை முறியடித்து 12 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது, ”என்று அமைச்சர் கூறினார்.

இந்த ஆண்டு மேலும் 5-6 கோடி உறுப்பினர்களை சேர்க்கவும் கட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கோடிக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் கட்சியில் உறுப்பினராக சேர தயாராக உள்ளனர். உறுப்பினர்களுடன் இணைந்து , இந்தியாவை வலுவாகவும் சக்திவாய்ந்ததாகவும் மாற்ற பாஜக செயல்படும், ”என்றார்.

ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய இந்த உறுப்பினர் சேர்க்கை ஆகஸ்ட் 20 ஆம் தேதி மொத்தம் 14,78,67,753 கோடி பாஜக உறுப்பினர்களுடன் முடிந்தது.