சீன எல்லையில் போர் ஒத்திகை

சீன எல்லையில் போர் ஒத்திகை

இந்திய ராணுவமும் இந்திய விமானப்படையும் இணைந்து அசாம் மாநிலத்தின் சீன எல்லைப்பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபடப்போவதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.   காஷ்மீரின் வளர்ச்சிக்காக விதி 370 ஐ நீக்கியபின்  எல்லைகளில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.  

அதன் ஒரு பகுதியாக இந்திய ராணுவம் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்திவருகிறது.  17 தரைபடை பிரிவுகள் இதில் பங்கேற்பதாக கூறப்படுகிறது.  வடகிழக்கில் நடைபெறும் மிகப்பெரிய போர் ஒத்திகை இதுவாகும்.   போர் ஒத்திகை அடுத்தமாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.