சீன நிறுவனங்களுக்கு தடை - ஆர்எஸ் எஸ் சார்பான சுதேசி விழிப்புண்ர்வு இயக்கம்

சீன நிறுவனங்களுக்கு தடை - ஆர்எஸ் எஸ் சார்பான சுதேசி விழிப்புண்ர்வு இயக்கம்

சீன நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பான சுதேசி விழிப்புணர்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

நமது நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல் தேசத்தின் மனசாட்சியை உலுக்குவதாக அமைந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாத அமைப்பின் தலைவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா தொடர்ந்து தடையாக உள்ளது. எனவே, அந்த நாடு நமது நாட்டின் மூலம் பொருளாதார பயன்களை அடைவதைத் தடுக்க வேண்டும். எனவே, நமது நாட்டில் செயல்படும் சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், சீன நிறுவனங்களின் செல்லிடப்பேசி செயலிகள் பல தேசவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிப்பவையாக உள்ளன. எனவே, டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சீன செயலிகளுக்கும் தடைவிதிக்க வேண்டும்.