சூப்பர் ஸ்டாரா?  இல்ல அல்டிமேட் ஸ்டாரா? அழகான மோதல்

சூப்பர் ஸ்டாரா? இல்ல அல்டிமேட் ஸ்டாரா? அழகான மோதல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 'பேட்ட' திரைப்படமும் அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார் நடித்து சிவா இயக்கியுள்ள 'விஸ்வாசம்' திரைப்படமும் இன்று உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியாகின. இதனை இரண்டு நக்ஷத்திரங்களின் ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடினர். அதிகாலை முதலே இந்த திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. கிட்டதட்ட இரண்டு படங்களுமே ஒரே திரையங்க வளாகத்தில் வெளியாகியுள்ளது மார்கழி மாதத்தில் அனல் பறக்க வைத்துள்ளது. ரஜினிகாந்தின் 'பேட்ட' திரைப்படம் வெளியாகியுள்ள ஒரு திரையரகில் ரஜினி ரசிகர் ஒருவர் திருமணம் செய்து கொண்டார். இருதரப்பு ரசிகர்களும் இரண்டு திரைப்படங்களையுமே பார்க்கும் ஆவலில் இருக்கின்றனர்.பொங்கல் திருவிழாவிற்கு முன்னோட்டமாக இந்த திரை திருவிழா களைகட்டியுள்ளது.