சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர்

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின்பெயர் சூட்டப்படும் என்று அறிவித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, நன்றி தெரிவித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.  

சென்னை நகரத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக சென்ட்ரல் ரயில் நிலையம் விளங்குகிறது. எனவே, அத்தகைய ரயில் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்டுவது மிகவும் பொருத்தமானதுடன், அவருக்குச் சிறப்பு சேர்ப்பதாகும். 

சென்னையில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய தாங்கள், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தீர்கள். தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, மிகச் சிறந்த தலைவருக்கு செய்த சரியான கௌரவமாகும். 

எனவே, இத்தகைய அறிவிப்பை வெளியிட்ட தங்களுக்கு தமிழக மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.