சென்னைக்கு கிருஷ்ணா நீரை நிறுத்தியது ஆந்திர அரசு - திமுக மவுனம் ஏன்?

சென்னைக்கு கிருஷ்ணா நீரை நிறுத்தியது ஆந்திர அரசு - திமுக மவுனம் ஏன்?

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் உள்ள தண்ணீர் அடுத்த சில நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும். ஆந்திராவின் கிருஷ்ணா நீர் வந்துக்கொண்டிருந்தது, இதனால் அதிகாரிகள் சற்று நிம்மதியாக இருந்தனர். ஆனால் 28 அக்டோபர் அன்று, தண்ணீர் திறப்பதை சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு திடீரென நிறுத்தியதால், சென்னை ஏரிகளுக்கு தண்ணீர் வருவது நின்று விட்டது. நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னை வந்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார்.  காவேரி விஷயத்தில் கர்நாடகாவின் ஆளுங்கட்சியான காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் தராமல், சம்பந்தமே இல்லாமல் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காண்பித்தார்கள் திமுகவினர். ஆனால் இன்றைக்கோ தண்ணீரை நிறுத்திய ஆந்திர முதல்வருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கிறது திமுக. 

தண்ணீரை நிறுத்தியவரை எதிர்த்து போராட்டம் இல்லை, #GobackAndhraCM ட்விட்டர் இல்லை, கண்டன அறிக்கை கூட இல்லை. 

வீட்டிற்கே அழைத்து விருந்து வைத்தார்கள்.  சரி, வரவேற்பது தமிழ் மரபு.  சந்திப்பின் போது கிருஷ்ணா நீரை நிறுத்தியது ஏன்?, உடனே திறந்து விடுங்கள் என்றாவது சொன்னாரா ஸ்டாலின்? அதுவும் இல்லை. மோடியை தோற்கடிப்பது எப்படி? என்றே பேசினார்கள். 

சென்னையில் தண்ணீர் பிரச்சனை என்றால் ஆளும்கட்சிக்கு பெரிய பின்னடைவு ஏற்படும். அதனால் யாருக்கு லாபம் என்பது குழந்தைக்கும் தெரியும். எனவே தான் மக்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, நமக்கு ஒட்டு வந்தால் போதும் என்று திமுக அமைதி காக்கிறது என்று கூறுகிறார்கள்.

இந்த கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு நிறுத்தியதன் பின்னணியில் திமுக இருக்கக்கூடுமோ என்றும் நினைக்க தோன்றுகிறது.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா தங்கள் பிரதிநிதிகளை நியமித்தது, மத்திய அரசும் தனது பிரதிநிதியை நியமித்தது. ஆனால் தேர்தல் காரணமாக காங்கிரஸ் ஆட்சி செய்த கர்நாடக அரசு, யாரையும் நியமிக்கவில்லை. இதன் காரணமாக இந்த மேலாண்மை வாரியம் அமைவது தள்ளிக்கொண்டே போனது. 

கர்நாடகா செய்த தவறுக்கு மத்திய அரசை குறை கூறி , பிரதமர் சென்னை வந்தபோது கருப்பு கொடி காட்டியது திமுக. gobackmodi என்று கோடிகளை கொட்டிக்கொடுத்து twitterல் பரபரப்பு காண்பித்தார்கள். (இதில் பல டிவீட்கள் வெளிநாட்டில் இருந்து பதிவு செய்யப்பட்டது  தெரிந்தது).

தேர்தல் முடிந்த பிறகு, பாஜக அரசு பதவி ஏற்று ஒரு வாரம் எடியூரப்பா முதல்வராக இருந்தார். இந்த ஒரு வாரத்தில் மேலாண்மை வாரியம் அமைந்தது. பிறகு பெரும்பாண்மை இல்லாமல் அவர் ராஜினாமா செய்ய , காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. மழை கொட்ட, தண்ணீர் தானாக காவிரியில் பாய்ந்தது நமக்கு தெரியும்.

திமுக நினைத்திருந்தால், தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை வலியுறுத்தி மேலாண்மை வாரியம் அமைத்திருக்க முடியம், ஆனால் பாஜக மீது மக்கள் கோபம் அடைய வேண்டும் என்று விரும்பி அமைதி காத்தது.

அன்றைக்கு காவேரி, இன்றைக்கு கிருஷ்ணா நீர். இரண்டிலுமே திமுக தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது திட்டவட்டமாக தெரிகிறது.   தி.மு.க.வுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்பதற்கு மேலும் ஒரு சான்று இது.