சென்னையில் புயல் எச்சரிக்கை தகவல் மையம் திறப்பு

சென்னையில் புயல் எச்சரிக்கை தகவல் மையம் திறப்பு

சென்னையில் புயல் எச்சரிக்கை தகவல் மையம் நேற்று (நவ.15) திறந்து வைக்கப்பட்டது.
மையத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயக்குமார், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘பேரிடர் காலங்களில் தகவல் பரிமாற்றம் முக்கியம் என்பதால் மக்களுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை மற்றும் தகவல்களை தெரிவிக்க புயல் எச்சரிக்கை தகவல் மையம் திறக்கப்பட்டு உள்ளது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்ட அதிகாரிகள், இந்த மையத்தோடு தொடர்பில் இருப்பார்கள். புயல் குறித்து வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 5 ஆயிரத்து 67 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 372 இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.