சென்னையில் மழை

சென்னையில் மழை

நேற்று இரவு முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வடகிழக்கு பருவ மழை துவங்கியும், சரியான மழை பெய்யததால் கவலையில் இருந்த சென்னைவாசிகளுக்கு இந்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.