சென்னை ஐ.ஐ.டி உருவாக்கியுள்ள மைக்ரோ பிராசசர் - 'சக்தி'

சென்னை ஐ.ஐ.டி உருவாக்கியுள்ள மைக்ரோ பிராசசர் - 'சக்தி'

சென்னை ஐ.ஐ.டியில் இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு 'சக்தி' என்று பெயரிடப்பட்டுள்ளது.  இந்த 'சக்தி' மைக்ரோ பிராசசர் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதனால், வெளிநாட்டு மைக்ரோ பிராசசர்களை இறக்குமதி செய்வது பெருமளவில் குறையும், அதோடு தயாரிப்பு செலவும் குறையும்.

இந்த மைக்ரோ பிராசசர் இணைய தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனால், இந்த மைக்ரோ பிராசசரை தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு துறைகளில் பயன்படுத்தலாம். இவ்வாறு சென்னை ஐ.ஐ.டியின் தலைமை ஆராய்ச்சியாளர் பேராசிரியர் காமகோடி வீழிநாதன் தெரிவித்தார்.