சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எம்.ஜி.ஆர் ரயில் நிலையமாக பெயர் மாற்றம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எம்.ஜி.ஆர் ரயில் நிலையமாக பெயர் மாற்றம்

கடந்த மாதம் பிரதமர் மோடி பங்கேற்ற மக்களவைத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.

இதனைதொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்.ரயில் நிலையம் என்ற பெயர் வைக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.